அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று (நான் அஞ்சியிருக்கா)விட்டால் - ஸுஹைர் அவர்களின் அறிவிப்பில் ‘எனது சமுதாயத்தினருக்கு’ என்று வந்துள்ளது - ஒவ்வொரு தொழுகையின்போதும் பல் துலக்குமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"என் உம்மத்திற்குச் சிரமமாகிவிடும் என்று நான் எண்ணாதிருந்தால், இஷாவைத் தாமதப்படுத்தும்படியும், ஒவ்வொரு தொழுகைக்கும் ஸிவாக் பயன்படுத்தும்படியும் அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்."