அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம் அல்-மாஸினி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதை அவர் கண்டார்கள். அவர்கள் (ஸல்) வாய் கொப்பளித்தார்கள், பிறகு மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்தார்கள், பிறகு தங்கள் முகத்தை மூன்று முறையும், பிறகு தங்கள் வலது கையை மூன்று முறையும், பிறகு மற்றொன்றையும் மூன்று முறையும் கழுவினார்கள். பிறகு அவர்கள் (ஸல்) புதிய தண்ணீர் எடுத்து, தங்கள் தலைக்கு மஸஹ் செய்து, பிறகு தங்கள் பாதங்களை அவை சுத்தமாகும் வரை கழுவினார்கள்.