இஷாத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு மனிதர், “எனக்கு (தங்களிடம்) ஒரு தேவை உள்ளது” என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் எழுந்து அவருடன் இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். மக்கள் - அல்லது மக்களில் சிலர் - தூங்கும் வரை (அப்பேச்சு நீடித்தது). பின்னர் அவர்கள் தொழுதார்கள்.