அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டு, பின்னர் அதை மீண்டும் செய்ய விரும்பினால், அவர் உளூ செய்ய வேண்டும்."
அபூ பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு உளூ" என்பது மேலதிகமாக இடம்பெற்றுள்ளது. மேலும் அவர், "பின்னர் மீண்டும் செய்ய நாடினார்" என்று கூறினார்.