அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைச் சந்தித்தபோது, அவர் (தாம்பத்திய உறவால்) தீட்டுப்பட்டிருந்தார். எனவே, அவர் (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) ஒதுங்கிச் சென்று, குளித்துவிட்டுத் திரும்பினார். பிறகு, "நான் (தாம்பத்திய உறவால்) தீட்டுப்பட்டிருந்தேன்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டார்" என்று கூறினார்கள்.
ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அவர் ஜுனுப் நிலையில் இருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைச் சந்தித்தார்கள்:
மேலும் அவர்கள் என் அருகில் வந்து தமது கையை நீட்டினார்கள். நான், 'நான் ஜுனுப் நிலையில் இருக்கிறேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'முஸ்லிம் அசுத்தமாக (நஜீஸ்) ஆக மாட்டான்' என்று கூறினார்கள்.