அலி பின் அபீ தாலிப் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவரொருவர் தம் உடலில் ஒரு முடியளவு இடத்தை பெருந்துடக்கிலிருந்து சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறாரோ, அவருக்கு நரக நெருப்பில் இன்னின்ன தண்டனைகள் செய்யப்படும்." அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அதன் காரணமாக நான் என் தலைமுடிக்கு விரோதியாகிவிட்டேன்." மேலும், அவர்கள் தமது தலையை மழித்து வந்தார்கள்.