யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறியதாவது:
நான் அம்ரா அவர்களிடம் வெள்ளிக்கிழமையன்று குளிப்பதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்: "மக்கள் தம் கைகளாலேயே உழைப்பவர்களாக இருந்தனர். அவர்கள் ஜுமுஆவிற்குச் செல்லும்போது, (வேலை செய்த) அதே கோலத்திலேயே செல்வார்கள். எனவே அவர்களிடம், 'நீங்கள் குளித்திருக்கலாமே!' என்று கூறப்பட்டது."