ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
எங்களில் எவருக்கும் ஒரேயொரு ஆடையைத் தவிர வேறு ஆடை இருக்கவில்லை, அதிலேயே நாங்கள் மாதவிடாய் அடைவோம் (மாதவிடாய் காலமெல்லாம் அதையே அணிந்திருப்போம்). மாதவிடாய் இரத்தத்தால் அது கறைபடும்போதெல்லாம், நாங்கள் அந்த இரத்தக் கறையில் உமிழ்நீரைத் தடவி, எங்கள் நகங்களால் அந்த இரத்தத்தைச் சுரண்டிவிடுவோம்.