இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

648 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح قَالَ وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏"‏ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلاَةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلاَةَ عَنْ وَقْتِهَا ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ ‏"‏ صَلِّ الصَّلاَةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ ‏"‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا ‏.‏
அபூ தர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் (உரிய) நேரத்தை விட்டும் தாமதப்படுத்தும், அல்லது தொழுகையை அதன் நேரத்தை விட்டும் (தாமதப்படுத்தி) சாகடிக்கும் ஆட்சியாளர்கள் உன் மீது இருந்தால் நீ எவ்வாறு இருப்பாய்?" என்று கேட்டார்கள். நான், "தாங்கள் எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகையை அதற்குரிய நேரத்தில் நீ தொழுதுவிடு. பிறகு அவர்களுடன் (அத்தொழுகையை) நீ அடைந்தால், (அவர்களுடனும் சேர்ந்து) தொழுதுகொள்! ஏனெனில், அது உனக்கு உபரியான (நஃபில்) தொழுகையாக அமையும்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்) கலஃப் என்பவர், 'அதன் நேரத்தை விட்டும்' (என்பதைக்) குறிப்பிடவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح