அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: (ஒரு பயணத்தில்) மக்கள் (ஃபஜ்ர்) தொழுகையைத் தவறவிடும் அளவுக்கு உறங்கிவிட்டபோது, நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ், அவன் நாடியபோது உங்கள் ஆன்மாக்களைக் கைப்பற்றினான்; அவன் நாடியபோது அவற்றை திருப்பிக்கொடுத்தான்" என்று கூறினார்கள். எனவே, சூரியன் உதித்து (அதன் ஒளி) வெண்மையாகும் வரை மக்கள் தங்கள் இயற்கைக் கடன்களை நிறைவேற்றி, உளூச் செய்தார்கள். பின்னர் (நபி (ஸல்) அவர்கள்) எழுந்து தொழுதார்கள்.