இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

504சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، قَالَ سَمِعْتُ جَدِّي عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي مَحْذُورَةَ، يَذْكُرُ أَنَّهُ سَمِعَ أَبَا مَحْذُورَةَ، يَقُولُ أَلْقَى عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الأَذَانَ حَرْفًا حَرْفًا ‏ ‏ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ حَىَّ عَلَى الْفَلاَحِ ‏ ‏ ‏.‏ قَالَ وَكَانَ يَقُولُ فِي الْفَجْرِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ ‏.‏
அபூ மஹ்தூரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அதானை (பாங்கை) சொல்லுக்குச் சொல் கற்றுக் கொடுத்தார்கள். (அவை):
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்;
அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்;
அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ்;
(பின்னர், மெல்லிய குரலில் கூறிவிட்டு, மீண்டும் சப்தமாக) அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்;
அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ்;
ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலஸ் ஸலாஹ்;
ஹய்ய அலல் ஃபலஹ், ஹய்ய அலல் ஃபலஹ்.
(அபூ மஹ்தூரா (ரழி) அவர்கள்) ஃபஜ்ரு தொழுகையின் அதானில் “அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்” (தொழுகை உறக்கத்தை விடச் சிறந்தது) என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)