உத்மான் பின் அபில் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான், 'அல்லாஹ்வின் தூதரே! என்னை என் சமூகத்தாருக்கு இமாமாக ஆக்குங்கள்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'நீர் அவர்களின் இமாம் ஆவீர். எனவே, அவர்களில் மிகவும் பலவீனமானவரைக் கருத்தில் கொண்டு, தனது அதானுக்காக எந்தக் கூலியையும் பெற்றுக்கொள்ளாத ஒரு முஅத்தினைத் தெரிவு செய்வீராக' என்று கூறினார்கள்."