நாங்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது, முஅத்தின் பாங்கு சொன்னார். அப்போது ஒரு மனிதர் பள்ளிவாசலிலிருந்து எழுந்து நடந்து வெளியேறினார். அவர் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும் வரை அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் கண்கள் அவரைப் பின்தொடர்ந்தன. அப்போது அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "இவர் அபுல் காசிம் (முஹம்மது (ஸல்)) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்."