وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ بِلاَلٌ يُؤَذِّنُ إِذَا دَحَضَتْ فَلاَ يُقِيمُ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا خَرَجَ أَقَامَ الصَّلاَةَ حِينَ يَرَاهُ .
ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: பிலால் (ரழி) அவர்கள் (ளுஹர் தொழுகைக்காக) சூரியன் சாய்ந்ததும் பாங்கு கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வெளியே வரும் வரை அவர் இகாமத் கூறமாட்டார். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, அவர்களைக் கண்டதும் அவர் தொழுகைக்கு இகாமத் கூறுவார்.