حَدَّثَنَا آدَمُ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالإِمَامُ يَخْطُبُ ـ أَوْ قَدْ خَرَجَ ـ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, கூறினார்கள், "உங்களில் எவரேனும் இமாம் குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதோ அல்லது அதற்காக (குத்பா நிகழ்த்துவதற்காக) அவர் வந்துவிட்டிருக்கும்போதோ வந்தால், அவர் இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றட்டும்."
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது சுலைக் ஃகதஃபானி (ரலி) வந்தார். அவர் (தொழாமல்) அமர்ந்துவிட்டார். உடனே அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "சுலைக்கே! எழுந்து நின்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! அவ்விரண்டையும் சுருக்கமாகத் தொழுவீராக!" என்று கூறினார்கள்.
பிறகு (மக்களிடம்), "இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது உங்களில் ஒருவர் (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்; அவ்விரண்டையும் அவர் சுருக்கமாகத் தொழட்டும்" என்று கூறினார்கள்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் இமாம் வந்துவிட்ட நிலையில் வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.”
ஷுஃபா அவர்கள் கூறினார்கள்: “ஜும்ஆ நாளில்.”