حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنْ دُعَائِهِ إِلاَّ فِي الاِسْتِسْقَاءِ، وَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஸ்திஸ்காவுடைய துஆவைத் தவிர வேறு எந்த துஆவுக்காகவும் தம் கைகளை உயர்த்தவே மாட்டார்கள். (இஸ்திஸ்காவுடைய துஆவில் மட்டும்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள்.
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنْ دُعَائِهِ، إِلاَّ فِي الاِسْتِسْقَاءِ، فَإِنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ. وَقَالَ أَبُو مُوسَى دَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعَ يَدَيْهِ وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்திஸ்கா (மழை வேண்டிப் பிரார்த்திப்பது) தவிர, தமது வேறு எந்தப் பிரார்த்தனையிலும் தமது கைகளை உயர்த்துவதில்லை. ஆனால், இஸ்திஸ்காவின்போது, அவர்களது அக்குள்களின் வெண்மை தெரியுமளவுக்குத் தமது கைகளை உயர்த்துவார்கள்.
அபூமூஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; அப்போது தமது கைகளை உயர்த்தினார்கள். (அப்போது) அவர்களது அக்குள்களின் வெண்மையை நான் கண்டேன்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழைக்காகப் பிரார்த்திக்கும்போது தவிர, வேறெந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை (இந்த அளவுக்கு) உயர்த்துபவர்களாக இருக்கவில்லை; (மழைக்காகப் பிரார்த்திக்கும்போது) தம் அக்குள்களின் வெண்மை தெரியுமளவுக்கு (அவர்கள் கைகளை) உயர்த்துவார்கள். எனினும் (அறிவிப்பாளர்) அப்துல் அஃலா அவர்கள், "அவரது அக்குளின் வெண்மை தெரியும் என்றோ அல்லது அக்குள்களின் வெண்மை (தெரியும்) என்றோ" கூறினார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழைக்காகப் பிரார்த்தனை செய்யும் போது தவிர, வேறு எந்தப் பிரார்த்தனையிலும் (பொதுவாக) தம் கைகளை உயர்த்தியதில்லை. மழைக்காகப் பிரார்த்தனை செய்யும் போது, அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்கு தம் கைகளை உயர்த்துவார்கள்."