உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: 'மலையுச்சியில் இருக்கும் ஓர் ஆட்டு இடையன் தொழுகைக்காக அதான் சொல்லி, தொழுவதைக்கண்டு உங்கள் இறைவன் (அல்லாஹ்) மகிழ்ச்சியடைகிறான். அல்லாஹ் கூறுகிறான்: ‘என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள்; இவன் தொழுகைக்காக அதானும் இகாமத்தும் சொல்லி, எனக்கு அஞ்சுகிறான். நான் என் அடியானை மன்னித்துவிட்டேன், மேலும் அவனை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிட்டேன்.’”