இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1163ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَىْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَىِ الْفَجْرِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுகையை விட வேறு எந்த உபரித் தொழுகையையும் (நவாஃபில்) அதிக உறுதியுடனும், பேணுதலுடனும் தொழுததில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
724 fஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ عَلَى شَىْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مُعَاهَدَةً مِنْهُ عَلَى رَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், ஃபஜ்ருக்கு முன் (தொழும்) இரண்டு ரக்அத்களைப் (தொடர்ந்து) பேணுவதில் காட்டிய அளவுக்கு, (வேறு எந்த) நபிலான வணக்கங்களிலும் அதிக அக்கறை செலுத்துபவர்களாக இருக்கவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح