இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1165ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمَّتِهِ، عَمْرَةَ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُخَفِّفُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ حَتَّى إِنِّي لأَقُولُ هَلْ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்கு முன்னுள்ள இரண்டு ரக்அத்துகளை (மிகவும்) இலகுவாகத் தொழுவார்கள். எந்த அளவிற்கென்றால், 'அவர்கள் (அதில்) அல்ஃபாத்திஹா (உம்முல் கிதாப்) ஓதினார்களா?' என்று நான் (எனக்குள்) சொல்லிக்கொள்ளும் அளவிற்கு (அது இலகுவாக இருக்கும்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
724 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ عَمْرَةَ، تُحَدِّثُ عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَىِ الْفَجْرِ فَيُخَفِّفُ حَتَّى إِنِّي أَقُولُ هَلْ قَرَأَ فِيهِمَا بِأُمِّ الْقُرْآنِ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (ஃபர்ளுத் தொழுகைக்கு முந்திய சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழுவார்கள். அதில் அவர்கள் சூரா அல்ஃபாத்திஹாவை ஓதினார்களா என்று நான் (ஆச்சரியத்துடன்) சொல்லும் அளவுக்கு அவற்றைச் சுருக்கமாகத் தொழுவார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
946சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كُنْتُ لأَرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَىِ الْفَجْرِ فَيُخَفِّفُهُمَا حَتَّى أَقُولَ أَقَرَأَ فِيهِمَا بِأُمِّ الْكِتَابِ
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களைத் தொழுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அவ்விரண்டையும் (அவ்வளவு) சுருக்கமாகத் தொழுவார்கள், (அவர்கள்) அதில் உம்முல் கிதாபை (அதாவது, அல்-ஃபாத்திஹாவை) ஓதினார்களா என்று நான் (எனக்குள்ளேயே) எண்ணுமளவிற்கு.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)