இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

558சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنِ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَى صَلاَةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لاَ يُنْصِبُهُ إِلاَّ إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ وَصَلاَةٌ عَلَى أَثَرِ صَلاَةٍ لاَ لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ ‏ ‏ ‏.‏
அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கடமையான தொழுகையை ஜமாஅத்துடன் (பள்ளிவாசலில்) நிறைவேற்றுவதற்காக உளூச் செய்த பின் ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றால், அவரது கூலியானது இஹ்ராம் (ஹஜ் யாத்ரீகர்கள் அணியும் ஆடை) அணிந்து ஹஜ் யாத்திரைக்குச் செல்பவரைப் போன்றதாகும்.

மேலும், யார் முற்பகல் (ளுஹா) தொழுகையை நிறைவேற்றுவதற்காக சிரமப்பட்டு வெளியே செல்கிறாரோ, அவர் உம்ராச் செய்பவரைப் போன்ற நற்கூலியைப் பெறுவார். மேலும், ஒரு தொழுகைக்குப் பின் மற்றொரு தொழுகை தொழப்பட்டு, அவற்றுக்கு இடையில் எந்த உலகியல் பேச்சும் இல்லையென்றால், அது ‘இல்லிய்யூன்’ இல் பதிவு செய்யப்படும்.

ஹதீஸ் தரம் : ஹஸன் (அல்-அல்பானீ)
حسن (الألباني)