நான் ஒரு இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். மேலும் நான் அவர்களுக்குத் தண்ணீரும், அவர்களுக்குத் தேவையானவற்றையும் கொண்டு வந்தேன். அவர்கள் என்னிடம் கூறினார்கள்: (நீர் விரும்பும் எதையும்) கேளும். நான் கூறினேன்: நான் சொர்க்கத்தில் உங்களுடைய தோழமையை வேண்டுகிறேன். அவர்கள் (நபியவர்கள்) கூறினார்கள்: அல்லது இது தவிர வேறு ஏதேனும் வேண்டுமா? நான் கூறினேன்: (எனக்குத் தேவையானது) அவ்வளவுதான். அவர்கள் கூறினார்கள்: அப்படியானால், நீர் அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வதன் மூலம், உமக்காக இதனை (நான் பெற்றுத் தருவதற்கு) எனக்கு உதவுங்கள்.
ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒழு செய்வதற்கான தண்ணீரைக் கொண்டு வந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தேன். அவர்கள் (என்னிடம்), 'என்னிடம் கேளுங்கள்' என்று கூறினார்கள். நான், 'நான் சுவனத்தில் உங்களுடன் இருக்க விரும்புகிறேன்' என்று கூறினேன். அவர்கள், 'வேறு ஏதாவது வேண்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'அது மட்டும் தான்' என்று கூறினேன். அவர்கள், 'அதிகமாக ஸஜ்தா செய்வதன் மூலம் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற எனக்கு உதவுங்கள்' என்று கூறினார்கள்."