இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1140ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا الْوِتْرُ وَرَكْعَتَا الْفَجْرِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் வித்ரும், ஃபஜ்ருடைய (ஃபர்ளுத் தொழுகைக்கு முந்திய) இரண்டு ரக்அத்களும் அடங்கும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
738 eஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَنْظَلَةُ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ عَشَرَ رَكَعَاتٍ وَيُوتِرُ بِسَجْدَةٍ وَيَرْكَعُ رَكْعَتَىِ الْفَجْرِ فَتِلْكَ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) பத்து ரக்அத்களாக இருந்தது. அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு (ஒரு சஜ்தாவுடன் கூடிய ஒரு ரக்அத்) தொழுவார்கள்; மேலும் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களையும் (ஃபர்ழுக்கு முந்தைய சுன்னத்) தொழுவார்கள். ஆகவே அவை பதிமூன்று ரக்அத்கள் ஆகும்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح