அப்துல்லாஹ் பின் ஹுப்ஷி அல்-கத்அமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபியவர்களிடம் (ஸல்) கேட்கப்பட்டது:
"எந்தச் செயல் சிறந்தது?" அவர்கள் கூறினார்கள்: "சந்தேகமில்லாத ஈமான் (நம்பிக்கை), (போரில் கிடைத்த செல்வங்களில்) கையாடல் செய்யப்படாத ஜிஹாத் மற்றும் ஹஜ்ஜத்துன் மப்ரூரா (ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்)."
"எந்தத் தொழுகை சிறந்தது?" என்று கேட்கப்பட்டது. அவர்கள் கூறினார்கள்: "நீண்ட நேரம் நின்று வணங்குவது (தொழுகையில் நீண்ட நேரம் நிற்பது)."
"எந்த தர்மம் சிறந்தது?" என்று கேட்கப்பட்டது. அவர்கள் கூறினார்கள்: "ஏழ்மை நிலையிலும் சிரமப்பட்டுச் செய்யும் தர்மம் (தன்னிடமுள்ள சொற்பமானவற்றில் இருந்து சிரமப்பட்டுச் செய்வது)."
"எந்த ஹிஜ்ரத் (இடம் பெயர்தல்) சிறந்தது?" என்று கேட்கப்பட்டது. அவர்கள் கூறினார்கள்: "கண்ணியமிக்க அல்லாஹ் தடைசெய்தவற்றைத் தவிர்ப்பவர்."
"எந்த ஜிஹாத் சிறந்தது?" என்று கேட்கப்பட்டது. அவர்கள் கூறினார்கள்: "இணைவைப்பாளர்களுக்கு எதிராகத் தனது பொருளாலும், தனது உயிராலும் ஜிஹாத் செய்பவர்."
"எந்த மரணம் மிகவும் சங்கைமிக்கது?" என்று கேட்கப்பட்டது. அவர்கள் கூறினார்கள்: "தனது குதிரை வெட்டி வீழ்த்தப்பட்டு, தனது இரத்தம் சிந்தப்பட்டு (போர்க்களத்தில்) இறப்பவர்."