அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "குர்ஆனை இனிமையான குரலில் ராகமிட்டு ஓதும் ஒரு நபிக்குச் செவிமடுப்பதைப் போன்று, வேறு எதற்கும் அல்லாஹ் செவிமடுப்பதில்லை."
சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "இதன் விளக்கம், '(குர்ஆனைக் கொண்டு) அவர் தன்னிறைவு அடைவது' என்பதாகும்."
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அவர்கள் கூறினார்கள்:
"அழகிய குரலில் குர்ஆனை உரத்து ஓதும் ஒரு நபிக்குச் செவிமடுப்பதைப் போன்று, வேறு எதற்கும் அல்லாஹ் செவிமடுப்பதில்லை."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, அதனை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கேட்டதாக அறிவிக்கப்படுகிறது:
அல்லாஹ், ஒரு நபி (அலை) அவர்கள் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதுவதற்குக் (மிகவும் அங்கீகரிக்கும் விதமாக) அவன் செவிசாய்ப்பதைப் போன்று வேறு எதற்கும் செவிசாய்ப்பதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டார்கள்: “அழகிய குரலுடைய ஒரு நபி அவர்கள், குர்ஆனை உரக்க ஓதுவதை அல்லாஹ் செவிமடுப்பதைப் போல வேறு எதற்கும் அவன் செவிமடுப்பதில்லை.”
وعن أبي هريرة رضي الله عنه قال :سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما أذن الله لشيء ما أذن لنبي حسن الصوت يتغنى بالقرآن يجهر به ((متفق عليه))
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன், "ஒரு நபி (அலை) அவர்கள் குர்ஆனை இனிமையான, சப்தமான குரலில் அழகாக ஓதுவதைக் அல்லாஹ் கவனமாகச் செவியேற்பது போன்று வேறு எதையும் அவன் அவ்வளவு கவனமாகச் செவியேற்பதில்லை."