அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரழி) அவர்கள், தம் மகன், "யா அல்லாஹ்! நான் சுவர்க்கத்தில் நுழையும்போது, அதன் வலது பக்கத்தில் உள்ள வெண் மாளிகையை உன்னிடம் கேட்கிறேன்" என்று கூறுவதைக் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "என் அருமை மகனே! அல்லாஹ்விடம் சுவர்க்கத்தைக் கேள்; நரகத்திலிருந்து அவனிடம் பாதுகாப்புத் தேடு. ஏனெனில், 'பிரார்த்தனையில் வரம்பு மீறும் மக்கள் இருப்பார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.