ஜுவைரியா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் அதிகாலையில் ஃபஜ்ர் தொழுத பின் என்னிடமிருந்து வெளியே சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் இருந்தேன். பிறகு முற்பகல் நேரத்தில் அவர்கள் திரும்பி வந்தபோது, நான் (அப்படியே) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "நான் உங்களைவிட்டுப் பிரிந்து சென்றதிலிருந்து இதே நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஆம்" என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களைவிட்டுச் சென்ற பிறகு நான்கு வார்த்தைகளை மூன்று முறை நான் சொன்னேன். இன்று காலை முதல் நீங்கள் ஓதியவற்றுடன் அவற்றை எடையிட்டுப் பார்த்தால், அவையே கனமானதாக இருக்கும். (அவை):
(இதன் பொருள்: அல்லாஹ் தூயவன்; அவனையே போற்றுகிறேன். அவனது படைப்புகளின் எண்ணிக்கையளவும், அவனது திருப்தியளவும், அவனது அர்ஷின் எடையளவும், அவனது சொற்களின் மையளவும் அவனைத் துதிக்கிறேன்)."