நபி (ஸல்) அவர்களின் விடுவிக்கப்பட்ட அடிமையான ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார், “மகத்தான அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புக் கோருகிறேன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; அவன் (என்றென்றும்) உயிருடன் இருப்பவன்; (அனைத்தையும்) நிர்வகிப்பவன்; அவனிடமே நான் (பாவமன்னிப்புக் கோரி) மீள்கிறேன்,” (அஸ்தஃக்ஃபிருல்லாஹல்-அழீம் அல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல்-ஹய்யல்-கய்யூம வ அதூபு இலைஹி) என்று கூறுகிறாரோ, அவர் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியவராக இருந்தாலும் அவர் மன்னிக்கப்படுகிறார்.’”