அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடுவார்கள்: பயனளிக்காத கல்வியிலிருந்தும், பயப்படாத உள்ளத்திலிருந்தும், ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும், திருப்தியடையாத நப்ஸிலிருந்தும்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் கூறுபவர்களாக இருந்தார்கள்: 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினஷ்-ஷிகாகி வந்-நிஃபாகி, வ ஸூஇல்-அக்லாக் (யா அல்லாஹ்! பிளவுகளிலிருந்தும், நயவஞ்சகத்திலிருந்தும், தீய குணங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)'"