இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இஸ்லாத்தில் 'ஜலப்' (கட்டாயப்படுத்தி வரவழைத்தல்) இல்லை; 'ஜனப்' (ஒதுங்கிச் செல்லுதல்) இல்லை; 'ஷிகார்' (கைம்மாற்றுத் திருமணம்) இல்லை. மேலும் எவர் கொள்ளையடிக்கிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்."
இம்ரான் பின் ஹுசைன் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இஸ்லாத்தில் ‘ஜலப்’, ‘ஜனப்’ மற்றும் ‘ஷிகார்’ ஆகியன இல்லை. மேலும் யார் கொள்ளையடிக்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்."
அம்ர் இப்னு ஷுஐப் அவர்கள், தனது தந்தை வாயிலாக, தனது பாட்டனார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(ஜகாத் பெறுவதற்காகக் கால்நடைகளை வேறிடத்திற்குக்) கொண்டு வரச் செய்தலும் கூடாது; (ஜகாத் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக அவற்றை) வெகு தொலைவிற்கு ஓட்டிச் செல்லவும் கூடாது. அவர்களுடைய ஸதகாக்கள் (ஜகாத்) அவர்களுடைய வசிப்பிடங்களிலேயே பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்."
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்லாத்தில் ஜலப், ஜனப், ஷிகார் ஆகியவை இல்லை. மேலும், யார் ஒரு சொத்தை அபகரித்துக்கொள்கிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்.”