أَخْبَرَنِي الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ، عَنْ مُوسَى بْنِ أَعْيَنَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ هِلاَلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِعُشُورِ نَحْلٍ لَهُ وَسَأَلَهُ أَنْ يَحْمِيَ لَهُ وَادِيًا يُقَالُ لَهُ سَلَبَةُ فَحَمَى لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَلِكَ الْوَادِيَ فَلَمَّا وَلِيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ كَتَبَ سُفْيَانُ بْنُ وَهْبٍ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ يَسْأَلُهُ فَكَتَبَ عُمَرُ إِنْ أَدَّى إِلَيْكَ مَا كَانَ يُؤَدِّي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عُشْرِ نَحْلِهِ فَاحْمِ لَهُ سَلَبَةَ ذَلِكَ وَإِلاَّ فَإِنَّمَا هُوَ ذُبَابُ غَيْثٍ يَأْكُلُهُ مَنْ شَاءَ .
அம்ர் பின் ஷுஐப் அவர்கள், தனது தந்தை வழியாக, தனது பாட்டனார் கூறியதாக அறிவித்தார்கள்:
"ஹிலால் என்பவர் தன்னிடம் இருந்த தேனீக்களின் பத்தில் ஒரு பங்குடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஸலபா’ என்றழைக்கப்பட்ட ஒரு பள்ளத்தாக்கை தமக்காகப் பாதுகாக்குமாறு கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கை அவருக்காகப் பாதுகாத்தார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, சுஃப்யான் பின் வஹ்ப் அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி (அது பற்றிக்) கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் எழுதினார்கள்: 'அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செலுத்தி வந்ததைப் போன்று, தனது தேனீக்களின் பத்தில் ஒரு பங்கை உம்மிடம் செலுத்தினால், நீர் அவருக்காக ‘ஸலபா’வைப் பாதுகாப்பீராக! இல்லையெனில், அவை மழை வளம் கொண்டு வாழும் (காட்டுத்) தேனீக்களாகும்; விரும்பியவர் எவரும் அதிலிருந்து உண்ணலாம்.'"