அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுடைய பலிப்பிராணிகளுக்கு என்னை பொறுப்பாளராக நியமித்து, நான் அவற்றின் இறைச்சியையும், தோல்களையும், சேண விரிப்புகளையும் ஸதகாவாக (தர்மமாக) வழங்கிவிட வேண்டும் என்றும், கசாப்புக்காரருக்கு (அதிலிருந்து) எதையும் (கூலியாகக்) கொடுக்கக்கூடாது என்றும், 'நாமே அவருக்கு (அதற்கான) கூலியை வழங்கிவிடுவோம்' என்றும் கூறினார்கள்.