இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், முஆவியா பின் அபூ சுஃப்யான் (ரழி) அவர்கள் தமக்குக் கூறியதாக அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்-மர்வா எனும் இடத்தில் இருந்தபொழுது, ஒரு கத்தரிக்கோலால் அவர்களின் (தலை) முடியைக் கத்தரித்தேன்; அல்லது அவர்கள் அல்-மர்வா எனும் இடத்தில் இருந்தபொழுது, அவர்கள் ஒரு கத்தரிக்கோலால் தமது முடியைக் கத்தரித்துக்கொள்வதை நான் கண்டேன். 1722