இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1288 eஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي، خَالِدٍ عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ أَفَضْنَا مَعَ ابْنِ عُمَرَ حَتَّى أَتَيْنَا جَمْعًا فَصَلَّى بِنَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ ثُمَّ انْصَرَفَ فَقَالَ هَكَذَا صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَكَانِ ‏.‏
சயீத் இப்னு ஜுபைர் அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (அரஃபாத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று 'ஜம்வு' (எனும் முஸ்தலிஃபா) வந்தடைந்தோம். அங்கு அவர்கள் மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை ஒரே இகாமத்துடன் எங்களுக்குத் தொழுவித்தார்கள். பிறகு (தொழுகையை முடித்துத்) திரும்பியதும், "இவ்விடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இப்படித்தான் தொழுவித்தார்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
606சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ حَيْثُ أَفَاضَ مِنْ عَرَفَاتٍ فَلَمَّا أَتَى جَمْعًا جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فَلَمَّا فَرَغَ قَالَ فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَكَانِ مِثْلَ هَذَا ‏.‏
ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நான் இப்னு உமர் (ரழி) அவர்கள் அரஃபாத்திலிருந்து (ஹஜ்ஜின் கிரியைகளில் ஒன்றாக) புறப்பட்டபோது அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஜம்வு (முஸ்தலிஃபா) வந்தடைந்தபோது, மஃரிபையும் இஷாவையும் (ஒரே நேரத்தில்) சேர்த்துத் தொழுதார்கள். அவர்கள் (தொழுகையை) முடித்ததும், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் இது போன்றே செய்தார்கள்' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)