وَعَنْ سَرَّاءَ بِنْتِ نَبْهَانَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: { خَطَبَنَا رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -يَوْمَ اَلرُّءُوسِ فَقَالَ: أَلَيْسَ هَذَا أَوْسَطَ أَيَّامِ اَلتَّشْرِيقِ ? } اَلْحَدِيثَ رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ [1] .
ஸர்ரா பின்த் நப்ஹான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானியின் இரண்டாவது நாளான, ‘யவ்முர் ரூஊஸ்’ (துல்-ஹஜ் 11ஆம் நாள்) அன்று எங்களுக்கு உரை நிகழ்த்திக் கூறினார்கள், “இது தஷ்ரீக் நாட்களின் நடு நாள் அல்லவா?”