حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُسْأَلُ يَوْمَ النَّحْرِ بِمِنًى، فَيَقُولُ " لاَ حَرَجَ ". فَسَأَلَهُ رَجُلٌ، فَقَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ " اذْبَحْ، وَلاَ حَرَجَ ". وَقَالَ رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ. فَقَالَ " لاَ حَرَجَ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நஹ்ர் (குர்பானி கொடுக்கும்) நாளில் மினாவில் நபி (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின் கிரியைகள் தொடர்பாக) கேட்கப்பட்டபோது, அவர்கள் 'குற்றமில்லை' என்றே பதிலளித்தார்கள். பிறகு ஒரு மனிதர் அவர்களிடம், "நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன்பே என் தலையை மழித்துக்கொண்டேன்" என்று கூறினார். அவர்கள், "(இப்போது) அறுத்துப் பலியிடுங்கள்; குற்றமில்லை" என்று பதிலளித்தார்கள். (மற்றொருவர்) "நான் மாலையானதற்குப் பிறகே (ஜம்ராக்களில்) கல்லெறிந்தேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "குற்றமில்லை" என்று பதிலளித்தார்கள்.