மஃகில் இப்னு யசார் (ரழி) அவர்களின் சகோதரியை, அவருடைய கணவர் விவாகரத்து செய்திருந்தார். அப்பெண் தன்னுடைய இத்தாவின் காலத்தை (அதாவது, அப்பெண் மீண்டும் திருமணம் செய்வதற்கு முன்பு கழிய வேண்டிய காலம்) பூர்த்தி செய்யும் வரை, அவருடைய கணவர் அவரை விட்டுப் பிரிந்திருந்தார். பின்னர் அவர் (கணவர்) அப்பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் மஃகில் (ரழி) அவர்கள் (அதற்கு) மறுத்துவிட்டார்கள். எனவே, இந்த இறைவசனம் வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டது:-- "அப்பெண்கள் தங்கள் (முந்தைய) கணவர்களை மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்." (2:232)