وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي، الْعَلاَءِ عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، - رضى الله عنهما - أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِرَجُلٍ " هَلْ صُمْتَ مِنْ سُرَرِ هَذَا الشَّهْرِ شَيْئًا " . قَالَ لاَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَإِذَا أَفْطَرْتَ مِنْ رَمَضَانَ فَصُمْ يَوْمَيْنِ مَكَانَهُ " .
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "இந்த மாதத்தின் (ஷஅபான் மாதத்தின் நடுப்பகுதியிலோ அல்லது இறுதிப் பகுதியிலோ) நீர் ஏதேனும் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் (மாதத்தின் நோன்புகளை) முடித்ததும், அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் (சுன்னத்தான) நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.