சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் ஸஹ்ர் (உணவு) விஷயத்தில் பிலாலின் அதானோ, அல்லது அடிவானத்தில் (செங்குத்தாகத்) தோன்றும் இந்த வெண்மையோ உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்; (அடிவானத்தின் வெண்மை) இப்படிப் பரவும் வரை (நீங்கள் உண்ணலாம்)."
(இதை அறிவித்த) ஹம்மாத் (ரஹ்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்து, (அது) 'கிடைமட்டமாக' (இருப்பதை) விளக்கினார்கள்.