ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) கேட்பதற்காக வந்தார். அப்போது நான் கதவுக்குப் பின்னாலிருந்து (அவர் பேசுவதை) செவியுற்றுக் கொண்டிருந்தேன். அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் 'ஜுனுப்' நிலையில் இருக்கும்போதே தொழுகை(யின் நேரம்) என்னை அடைந்து விடுகிறது. இந்நிலையில் நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் 'ஜுனுப்' நிலையில் இருக்கும்போதே தொழுகை(யின் நேரம்) என்னை அடைகிறது; ஆயினும் நான் நோன்பு நோற்கிறேன்" என்று விடையளித்தார்கள்.
உடனே அவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களைப் போன்றவர் அல்லர். அல்லாஹ் உங்களது முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டானே!" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவனாகவும், நான் எதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உங்களை விட நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறேன் என நான் நம்புகிறேன்" என்று கூறினார்கள்.