ஒரு மனிதர் பள்ளிவாசலில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் அழிந்துவிட்டேன்!" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "நீர் என்ன செய்துவிட்டீர்?" என்று கேட்டார்கள். அவர், "நான் ரமலான் மாதத்தில் (நோன்பு நோற்றிருந்தபோது) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அவர், "என்னிடம் எதுவும் இல்லை" என்று கூறினார். அந்த மனிதர் அமர்ந்தார், அதே நேரத்தில் நபி (ஸல்) அவர்களிடம் உணவைக் கழுதையில் ஏற்றி ஒரு மனிதர் கொண்டு வந்தார் ..... (துணை அறிவிப்பாளர், அப்துர் ரஹ்மான் அவர்கள் மேலும் கூறினார்கள்: அது என்ன வகையான உணவு என்று எனக்குத் தெரியாது). அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்த அழிந்த மனிதர் எங்கே?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "இதோ நான் இருக்கிறேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "இந்த உணவை எடுத்து (யாருக்காவது) தர்மமாகக் கொடுங்கள்" என்று கூறினார்கள். அந்த மனிதர், "என்னை விட ஏழ்மையானவருக்கா? என் குடும்பத்தினருக்கு உண்ண எதுவும் இல்லை" என்று கேட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அப்படியானால், நீங்களே அதை உண்ணுங்கள்" என்று கூறினார்கள்.
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ، بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ حَدَّثَهُ أَنَّ عَبَّادَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ أَتَى رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ فِي رَمَضَانَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ احْتَرَقْتُ احْتَرَقْتُ . فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا شَأْنُهُ " . فَقَالَ أَصَبْتُ أَهْلِي . قَالَ " تَصَدَّقْ " . فَقَالَ وَاللَّهِ يَا نَبِيَّ اللَّهِ مَا لِي شَىْءٌ وَمَا أَقْدِرُ عَلَيْهِ . قَالَ " اجْلِسْ " . فَجَلَسَ فَبَيْنَا هُوَ عَلَى ذَلِكَ أَقْبَلَ رَجُلٌ يَسُوقُ حِمَارًا عَلَيْهِ طَعَامٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَيْنَ الْمُحْتَرِقُ آنِفًا " . فَقَامَ الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَصَدَّقْ بِهَذَا " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَغَيْرَنَا فَوَاللَّهِ إِنَّا لَجِيَاعٌ مَا لَنَا شَىْءٌ . قَالَ " فَكُلُوهُ " .
அப்பாத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:
ரமளான் மாதத்தில் ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் எரிந்துவிட்டேன்; நான் எரிந்துவிட்டேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நான் (நோன்பு நோற்ற நிலையில்) என் மனைவியுடன் கூடிவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "தர்மம் செய்வீராக" என்று கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, என்னிடம் (தர்மம் செய்ய) ஏதுமில்லை; அதற்குரிய சக்தியும் எனக்கில்லை" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "அமரும்" என்றார்கள். எனவே அவர் அமர்ந்தார். அவர் அந்நிலையில் இருந்தபோது, உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்ட ஒரு கழுதையை ஓட்டிக்கொண்டு ஒரு மனிதர் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சற்று முன்பு இங்கே 'எரிந்துபோனவர்' எங்கே?" என்று கேட்டார்கள். உடனே அந்த மனிதர் எழுந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை தர்மம் செய்வீராக" என்று கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களை அல்லாத மற்றவருக்கா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் பசியோடு இருக்கிறோம்; எங்களிடம் எதுவும் இல்லை" என்று கூறினார். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் இதை நீங்களே உண்ணுங்கள்" என்று கூறினார்கள்.