இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1947ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُسَافِرُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَعِبِ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلاَ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணிப்பதுண்டு. (அப்போது) நோன்பாளிகள் நோன்பு நோற்காதவர்களைக் குறை கூறியதுமில்லை; நோன்பு நோற்காதவர்களும் நோன்பாளிகளைக் குறை கூறியதுமில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1118 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سُئِلَ أَنَسٌ - رضى الله عنه - عَنْ صَوْمِ رَمَضَانَ فِي السَّفَرِ فَقَالَ سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَلَمْ يَعِبِ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلاَ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ ‏.‏
அனஸ் (ரழி) அவர்களிடம் பயணத்தின்போது ரமழானில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமழான் மாதத்தில் பயணம் செய்தோம். அப்போது நோன்பு நோற்றவர் நோன்பை விட்டவரைக் குறை கூறவில்லை; நோன்பை விட்டவரும் நோன்பு நோற்றவரைக் குறை கூறவில்லை (ஏனெனில் இரு செயல்களுமே அனுமதிக்கப்பட்டவை)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح