அபூபக்கரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரும், 'நான் ரமளான் நோன்பு நோற்றேன்' அல்லது '(அம்மாதம்) முழுவதும் கியாம் தொழுதேன்' என்று கூற வேண்டாம்." நான் அறியேன், (நபி (ஸல்) அவர்கள்) தற்புகழ்ச்சியை வெறுத்தார்களா? அல்லது (அவர்கள்) 'நிச்சயமாக (ரமளானின் நோன்பிலும் கியாமிலும்) கவனக்குறைவும் தூக்கமும் இருந்திருக்கும்' என்று கூறினார்களா? (இந்த வாசகம் உபைதுல்லாஹ் உடையதாகும்).