அபூ அய்யூப் அல்-அன்சாரீ (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என அறிவித்தார்கள்:
யார் ரமலான் மாத நோன்பை நோற்று, பின்னர் அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு (நோன்புகளை) நோற்கிறாரோ, அவர் நிரந்தரமாக நோன்பு நோற்றவரைப் போலாவார்.