அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
உங்களில் எவரேனும் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால், அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளட்டும். அவர் நோன்பு நோற்றிருந்தால், அவர் (வீட்டிலுள்ளவர்களுக்காக) பிரார்த்தனை செய்யட்டும், அவர் நோன்பு நோற்கவில்லையென்றால் அவர் சாப்பிடட்டும்.