இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2044ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ فِي كُلِّ رَمَضَانَ عَشْرَةَ أَيَّامٍ، فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாஃப் மேற்கொள்வார்கள், மேலும் அவர்கள் மரணித்த ஆண்டில், அவர்கள் இருபது நாட்கள் இஃதிகாஃபில் தங்கியிருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4998ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ يَعْرِضُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الْقُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً، فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي الْعَامِ الَّذِي قُبِضَ، وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا فَاعْتَكَفَ عِشْرِينَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ ‏{‏فِيهِ‏}‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒருமுறை நபி (ஸல்) அவர்களுடன் குர்ஆனை ஓதி சரிபார்த்துக்கொள்வது வழக்கம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் வஃபாத்தான வருடத்தில், ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருமுறை அதனை ஓதி சரிபார்த்துக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் (ரமலான் மாதத்தில்) பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பது வழக்கம். ஆனால், அவர்கள் வஃபாத்தான வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح