அபூ சயீத் குத்ரீ (ரழி) அவர்கள் (மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ லிஹ்யான் கூட்டத்தாரிடம் ஒரு படையை அனுப்பினார்கள். (மேலும் கூறினார்கள்:) ஒவ்வொரு இரண்டு பேரில் ஒருவர் படையில் சேர வேண்டும். பிறகு, (போருக்குச் செல்லாமல்) தங்கியவர்களிடம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் போருக்குச் செல்பவர்களின் குடும்பத்தையும் செல்வத்தையும் நன்கு கவனித்துக் கொள்கிறார்களோ அவர்கள் போராளிகளின் நன்மையில் பாதியைப் பெறுவார்கள்.