ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மறையும்போது, இரவின் முதல் ஜாமத்து இருள் நீங்கும் வரை உங்கள் கால்நடைகளையும் உங்கள் பிள்ளைகளையும் வெளியே விடாதீர்கள். ஏனெனில், சூரியன் மறையும் நேரம் முதல் இரவின் முதல் ஜாமத்து இருள் நீங்கும் நேரம் வரை ஷைத்தான் கட்டவிழ்த்து விடப்படுகிறான்.