அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: கைபர் போரின் நாளில் நான் கொழுப்பு நிறைந்த ஒரு பையைக் கண்டேன். நான் அதைப் பிடித்துக் கொண்டு கூறினேன்:
இன்று இதிலிருந்து எவருக்கும் எதையும் நான் கொடுக்க மாட்டேன். பிறகு நான் திரும்பிப் பார்த்தேன், அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் வார்த்தைகளைக் கேட்டு) புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.