நான் எனது பாட்டனார் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களுடன் அல்-ஹகம் இப்னு அய்யூப் அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தேன், (அங்கே) சிலர் ஒரு கோழியை இலக்காக ஆக்கி அதன் மீது அம்புகளை எய்து கொண்டிருந்தார்கள். அதன்பேரில் அனஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிராணிகளைக் கட்டுவதையும் (மற்றும் அவற்றை அம்புகளுக்கு இலக்காக்குவது போன்றவற்றையும்) தடை செய்திருந்தார்கள் என்று கூறினார்கள்.