ஷுரஹ்பீல் பின் முஸ்லிம் அல்-கவ்லானி அவர்கள் அபூ உமாமா அல்-பாஹிலீ (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்; அவர்கள், ஹஜ்ஜத்துல் விதா ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் கூறக் கேட்டார்கள்: “அல்லாஹ், உரிமையுள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களின் உரிமையை வழங்கியுள்ளான்; மேலும் வாரிசுக்கு வஸிய்யத் இல்லை.”